அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகரில் முகமது தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி பல்வேறு தவணைகளாக முகமது 12 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் கூறியபடி பணம் வரவில்லை. அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த முகமது அரியலூர் மாவட்ட சைபர் பாய் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.