இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5 மணிக்கு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பரிசாக சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், இது நாட்டளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரதமர் மோடி இந்த உரையின் மூலம் ஏதாவது முக்கியமான திட்டத்தையோ அல்லது புதிய பொருளாதார நடவடிக்கையையோ பகிரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை அவர் என்ன அறிவிக்கப் போகிறார் என்பதற்கான சந்தேகமும், உற்சாகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஜனங்கள் அனைவரும் இன்று மாலை அவரது உரையை நேரடியாக கவனிக்குமாறு சமூக ஊடகங்கள் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
