தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர் ஒருவரை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

சுதர்சன் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது எடுத்த வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்து அது தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் அதை லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவில்,

முதல்வர் ஸ்டாலின் தனது பாதுகாப்பு படையுடன் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருக்கையில், இளைஞர் பொன்னாடை ஒன்றை வைத்துக்கொண்டு அதை முதல்வரிடம்  கொடுக்க முயல்கிறார். இளைஞரை கண்டதும் முதல்வர்  வண்டியை நிறுத்தச் சொல்லி பொன்னாடையை கனிவாக பெற்று இளைஞனிடமிருந்து விடை பெற்று செல்கிறார்.

இதை கண்ட தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா என பிற மாநிலத்தவர்களும் பெஸ்ட் சிஎம் இந்தியாவிலேயே இவர்தான் என மகிழ்ச்சி பொங்க கமெண்ட்களை பதிவிட்டு வருவதை குறிப்பிட்ட வீடியோவிற்கு கீழ் காணலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sudharsan K P (@__myst3ry__boi__)