மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச் சேவை (CSC) மையத்தில் வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை செலுத்தி சேரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்ற சேவை உள்ள ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் I மாவட்டத்திற்கு ( நெல் III, எள்) 15/03/2023, (நெல் தரிசு பருத்தி, கரும்பு) 31/03/2023, வேலூர் மாவட்டத்திற்கு (கரும்பு ) 31/03/2023, மயிலாடுதுறை நெல் III 15/03/2023, பருத்தி III, நெல் தரிசு பருத்தி, கரும்பு 31/03/2023, ஈரோடு மாவட்டத்துக்கு கரும்பு 31/03/2023, தஞ்சாவூர் III, நாமக்கல் மாவட்டத்திற்கு 15/03/2023, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 31/03/2023, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31/03/2023 போன்ற தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.