இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பல்வேறு விதமான சிரமங்களுக்கு ஆளவார்கள். கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக குளிர்ந்த இடங்களுக்கு விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்வார்கள்.

இந்நிலையில் கோடை காலத்தில் முன்னிட்டு வழக்கறிஞர்கள் இனி கருப்பு உடை அணிய தேவை இல்லை என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும் அந்த சுற்றறிக்கையின் படி மார்ச் 13-ம் தேதி முதல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  கருப்பு உடை அணிய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.