
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பீகாரில் இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலே என்ன வேலை ? தமிழக அரசியலில் என்ன வேலை ? பீகாரில் இருந்து கூட்டி வந்து…. பல நூறு கோடி சம்பளம் கொடுத்து, இங்கு வேலை செய்ய சொல்ல தேவை என்ன இருக்கிறது ? என் நிலத்தை பற்றி தெற்கு தெரியுமா ? வடக்கு தெரியுமா ? பிரசாந்த் கிஷோருக்கு…. நான் யாருன்னு தெரியுமா ? எத்தனை மாவட்டம் இருக்கிறது ?
எந்த சமூகம் இருக்கிறது ? எங்கெங்கு ஏரி இருக்கு, குளம் இருக்கிறது என்று ஏதாவது தெரியுமா ? அப்புறம் எதற்கு கூட்டி வந்தீர்கள்…. தமிழன் உலகத்தில் எங்கு அடிபட்டாலும் போராடுவான். விவசாயிகளுக்கு பிரச்சினை எங்கு நடந்தாலும், விவசாயி ஓன்று கூடுவான். அது பதவி பிரச்சனை இல்லையே … ஒரு தொகுதி பிரச்சனை இல்லையே…
இந்த நாட்டின் பிரச்சனை… அங்கிருந்து வந்தார் ? இங்கிருந்து வந்தார் ? என்று சொல்லுகிறீர்கள்… நீங்கள் மட்டும் ஈரோடு கிழக்கு இடை தேர்தலுக்கு மொத்த பேரும் குவிஞ்சி வேலை செய்தீர்கள்… ஏன் நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் ? ஒரு தொகுதி தானே…. ஈரோடு கிழக்கில் இருப்பவர்கள் வேலை செய்யட்டும் என விட்டீர்களா ? தமிழ்நாட்டில் மொத்த பேரையும் குமித்து வேலை செய்தீர்களா ? அதற்கு பதில் இருக்கிறதா ?
இதை சொல்லுகிற அமைச்சரிடம் இதுக்கு பதில் இருக்கிறதா ? அப்போ எங்கையோ ஒரு விவசாயி போராடி அவன் சாகனும்… மற்ற விவசாயிகள் எல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா ?அடுத்தவன் துன்பப்படும் போது…. துயர படும்போது…. நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதற்கு உங்களுக்கு சுதந்திரம் தரப்படவில்லை என்று சொல்லுகிறார்கள்… நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள் என்றால்,
நாளைக்கு உங்கள் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகிவிடும் என்று சொல்லுகிறார்… அப்ப அவன் துன்பப்படுகிறான், அவன் நிலம் படிக்கப்படுகிறது….. நாளைக்கு என் நிலம் பறிக்கப்பட்டால்…. தன் வீட்டு கூரை எரியாத வரைக்கும், இங்கு தண்ணீர் எடுத்துட்டு வர எவனும் தயாராக இல்லை…. அடுத்த வீடு தான் எரியுது என்று நீ படுத்தால்,
கடைசியாக நீ சாம்பலாக தான் கீழே விழுவாய்… அங்கு செய்யாறு பிரச்சினை என்று சொன்னால்… நாளைக்கு அடையாறில் வருகிறது என்றால், என்ன பண்ணுவீர்கள் ? அதெல்லாம் அப்படி எல்லாம் பார்க்க முடியாது… ஏன் அங்கிருந்து வருகிறார்….. ஏன் இங்கிருந்து போகிறார்….. இதெல்லாம் என்ன பேச்சு என தெரிவித்தார்.