12ஆம் வகுப்பில் பயாலஜி பாடத்தை எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், அதைத் தளர்த்தி இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயாலஜி இல்லாத பிரிவை எடுத்தவர்கள், மருத்துவர் ஆக முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10th, +2 தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே நீட் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.