அஜித்துடன் மஞ்சுவாரியர் நடித்திருக்கும் “துணிவு” படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் துணிவு சூட்டிங் சமயத்திலும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார். இந்த பயணத்தின்போது மஞ்சுவாரியரும் அஜித் உடன் இணைந்திருந்தார். அஜித் உடன் லடாக் பகுதியில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை மஞ்சுவாரியர் தன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மஞ்சுவாரியர் பைக் ஓட்டுவதற்குரிய ஓட்டுனர் உரிமத்தினை பெற்றுள்ளார். எர்ணாகுளம் காக்கநாடு ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை அவர் பெற்றிருக்கிறார். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.