உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் லாங் பிரஸ் செய்யாமலேயே வீடியோ ஐகானை Tap செய்து வீடியோக்களை பதிவு செய்யும் கேமரா மோடு என்ற புதிய அம்சத்தை whatsapp அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு முறை TAP செய்வதன் மூலம் போட்டோவில் இருந்து வீடியோ மோடுக்கு மாற்றும் அம்சமும் வர உள்ளது. இதற்கு முன் லாங் பிரஸ் செய்து video எடுப்பதால் நீளமான வீடியோக்களை எடுப்பதில் சிரமம் இருந்தது குறிப்பிடத்தக்கது.