தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதன்படி பல ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகியது.

இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து OTT-ல் ரிலீஸ் ஆகியது. அங்கேயும் 2 திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி Netflix-ல் வெளியாகிய துணிவு முதல் இடத்திலும் Prime Video-ல் வெளியான வாரிசு 2-வது இடத்திலும் இருக்கிறதாம்.