தமிழ் திரையுலகில் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் யோகிபாபு நடிப்பில் இயக்குனர் ஷான் இயக்கத்தில் வெளியாகிய படம் “பொம்மை நாயகி”. மாறுபட்ட கதை களத்துடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் டெலிகிராம் வாயிலாக இப்படத்தை பார்த்து விட்டு படத்தை பாராட்டி இயக்குனரை டேக் செய்து பதிவுசெய்துள்ளார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஷான், பைரஸியில் படம் பார்த்து பாராட்டிய அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு விரைவில் நல்ல பிரிண்ட் Zee5 தளத்தில் வெளியாகுமென குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பீலிங் எல்லாம் இல்ல, அது வலி வேற டிபார்ட்மெண்ட் என தெரிவித்துள்ளார். இவரது இப்பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.