தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, ஒத்தையா கொடுத்து,  கத்தையே எடுப்பான் என்று நம்ம ஊர்ல சொல்லுவாங்க. 50% சொத்து வரி உயர்த்தியாச்சு, 50 சதவீதம் மின்சார கட்டணம்  கட்டணத்தை உயர்த்தியாச்சு, 30 சதவீதம் குடிநீர் வரியை உயர்த்தியாச்சு, லஞ்சம் லாவண்யம் 40 சதவீதத்துக்கு வந்துருச்சு. விலைவாசி உயர்த்தியாச்சு…

சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் விலை எல்லாம் உயர்த்திட்டு,  ஒத்தையா ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு…  கத்தையா  அள்ளிக்கிட்டு இருக்காரு நம்முடைய அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்கள். இதை  கோயம்புத்தூர் மக்கள் புரிஞ்சிப்பீங்க. எங்க பிராடு நடக்குதுன்னு கண்டுபிடிச்சீடுவிங்க…  இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் 7,53,000 கோடி. இதுல சிம்பிளா சொல்லனும்னா…. ஒரு ஒரு தனி மனிதனுடைய தலையின் மீது….. குடும்பத்தில் இருக்கக்கூடிய தனி மனிதனுடைய தலையின் மீது…..  3  லட்சம் ரூபாய் கடன் இருக்கு.

ஒரு கடன்கார  மாநிலமாக…. குடிகார மாநிலமாக….தமிழகத்தை  முழுமையாக மாற்றிவிட்டு…. இன்னைக்கு முதலமைச்சர் அவர்கள் 2024 பாராளுமன்ற தேர்தல் நம்பி இருப்பது,  ஒரு அமாவாசையும், ஒரு ஆயிரம் ரூபாயும். செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் பிறந்தநாள் விழா கொடுக்கிறோம்னு சொல்லிட்டு… 14ஆம் தேதி நிறைந்த அமாவாசை அன்னைக்கு கொடுத்தாங்க.. அமாவாசை நம்புறாங்க… ஆனால் அந்த சனாதன தர்மம் வேண்டாம் என தெரிவித்தார்.