காதலர் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. காதலர் தின வாரம் சென்ற 7ம் தேதி ரோஜா தினத்துடன் துவங்கியது. இதையடுத்து காதலுடன் தொடர்புடைய புரபோஸ் டே, சாக்லேட் டே போன்றவை கொண்டாடப்பட்டது. அதன்படி இன்று (பிப்.13) Kiss day கொண்டாடப்படுகிறது. தன் இணை மீது வைத்திருக்கும் அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாகவே முத்தம் பார்க்கப்படுகிறது. இது காதலர்கள் இடையிலான அன்பை மேலும் வலுப்படுத்துகிறது. கன்னத்தில் முத்தமிடுவது பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம் ஆகும்.

நெருங்கி பழகுவோரை அடிக்கடி பார்க்குபோதும், அவர்களை வாழ்த்தும்போதும் கன்னத்தில் முத்தமிடுவது இயல்பு. அதன்பின் அன்பாக நெற்றி மற்றும் தலையில் முத்தமிடுவது நீங்கள் அரவணைப்புடன் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். கையில் முத்தமிடுவது உங்களது இணை உங்களை அதிகம் மதிக்கிறார் என்பதை குறிக்கும். நீங்கள் மிகவும் ஸ்பெஷல் என்பது இதன் அர்த்தமாகும். அதீத ஈர்ப்பில் உள்ள காதல் ஜோடிகள் பரிமாறிக்கொள்வது தான் உதட்டு முத்தம்.