அதிமுக – பாஜக கூட்டணியை விரிவுபடுத்தும் நோக்கில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) மீண்டும் கூட்டணியில் இணைக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
அண்மையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இடையே முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக OPS மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இபிஎஸ், “OPS-ஐ கூட்டணியில் ஏற்கலாம், ஆனால் டிடிவி தினகரனை ஏற்க முடியாது” எனக் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் OPS மீண்டும் NDA கூட்டணியில் நுழைவதற்கான வாய்ப்புகள் பரவலாக பேசப்படுகின்றன. அதேசமயம், தினகரனை மீண்டும் வரவேற்க முடியாது என EPS வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது OPS தரப்பில் நம்பிக்கை அளித்துள்ளதுடன், அதிமுக மற்றும் பாஜக இடையே புதிய சமரச சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
