அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக்கட்சியில் இணைவாரா போன்ற பல கேள்விகள் எழுத் தொடங்கி இருக்கிறது