கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் கிரிக்கெட் உலகில் எப்போதுமே முடிவிற்கே வராத ஒரு தலைப்பாகும். இந்த விவாதத்தில் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிரடியான கருத்தைப் பதிவு செய்ய, அதற்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தொட்டா கணேஷ் கிண்டலாகவும் வெளிப்படையாகவும் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ மாதிரி பரவி வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடையேயான ஒப்பீட்டுப் பற்றிப் பேசினார். ஆசியாவிற்கு வெளியே உள்ள பவுன்சிங் மற்றும் சீமிங் பிட்ச்களில், சப்-கண்டினென்ட் பேட்ஸ்மேன்களும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு முதன்முதலில் நிரூபித்துக் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்தான் என்று அவர் பாராட்டினார்.
Pass on the weed, brother. https://t.co/3XOy6o6x9t
— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) August 20, 2026
அதே நேரத்தில், விராட் கோலி அந்தத் திறமையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் என்றும், வெளிநாடுகளில் ரன்கள் குவிப்பதில் அவர் ‘பேரை உயர்த்தி விட்டார்’ என்றும் டிவில்லியர்ஸ் கருத்துத் தெரிவித்தார். இந்த இரு வீரர்களின் வெற்றியும் அடுத்த தலைமுறை இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிவில்லியர்ஸின் இந்த மதிப்பீட்டை முன்னாள் இந்திய வீரர் தொட்டா கணேஷ் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் டிவில்லியர்ஸின் கருத்தைப் பகிர்ந்துகொண்டு, மிகவும் நக்கலான முறையில், “அந்தக் கஞ்சாவை எனக்கும் கொஞ்சம் கொடுங்க சகோதரன் (Pass on the weed, brother)” என்று கமெண்ட் செய்தார்.
தொட்டா கணேஷின் இந்தத் துணிச்சலான மற்றும் கலகலப்பான பதில் உடனடியாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவியது. பலர் இதனை டிவில்லியர்ஸின் கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாகப் பார்த்தனர். சச்சின் – கோலி ஒப்பீட்டு விவாதத்திற்கு இந்தச் சம்பவம் தற்போது ஒரு புதிய மற்றும் சுவாரசியமான திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
