கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் தாசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.