திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் உள்ள தியேட்டர் பின்புறம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசர்க்க ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பகுருதீன் அலி(45) என்பவரது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும் குடோனில் சோதனை செய்த போது மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பக்ருதீன் அலியை கைது செய்தனர். மேலும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், கார், 1 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.