தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து குழந்தை தனது தாயிடம் தெரிவித்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தொழிலாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.