
இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோ வரவேற்கப்படும், சில வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ஐஸ்கிரீம். அது கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்பாலமாக இருந்தாலும் சரி விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் ஐஸ்கிரீம் டிராயர் ஒன்றை உருவாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இளம்பெண் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் டப்பாக்களை எடுத்து அதை அனைத்தும் ஒரே டப்பாவில் சேர்த்து கலந்து மீண்டும் அதை ஃப்ரிட்ஜில் உள்ள டிராயரில் வைத்து பதப்படுத்தி, அதன் பின் அதனை உண்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் பொதுவாக ஐஸ் கட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் பிரேசர் பெட்டி ஐஸ்கிரீமை சேமிக்க சிறந்த இடம் அல்ல என்றும் மற்றொருவர் அதையெல்லாம் யார் சுத்தம் செய்யப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.