
இணையதளத்தில் ஒரு காதல் கதை வைரலாகி வருகிறது. அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே பள்ளியில் படித்த 2 பேர் அப்பள்ளியில் நடைபெற்று நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். அதன் பின்னர் தற்போது அவர்கள் நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது. இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டல்களை தெரிவித்து வருகின்றனர். ஜெங் மற்றும் அவரது மனைவி கடந்த ஜனவரி 7ஆம் தேதி குவாங்டாங் மாகாணத்தில் உள்ள chaozhou என்ற நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர், ஆனால் வெவ்வேறு வகுப்பு.
இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மணமகன் மற்றும் மணமகள் போல வேடம் அணிந்து, திருமண ஆடை அணிந்து இருந்தனர். அதன் பின்பு இவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்று தொடர்பை இழந்தனர். ஆனால் கடந்த 2022-ல் ஜெய்ஹிந்த் தனது பழைய பள்ளி நண்பர்கள் மற்றும் அவரது நாடகத்தின் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது குழந்தை பருவ காதலியை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் பின் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு இவர்களது காதல் அதிகமாகி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.