தைவான் நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தனக்குத்தானே ஆண்கள் செய்யும் வாசக்டோமி என்ற கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை இருப்பது போலவே ஆண்களுக்கும் உள்ளது. இதன் பெயர் வாசக்டோமி என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தைவான் நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்னுடைய மனைவி மேலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் தனக்கு விருப்பம் விருப்பமில்லை என்றும், அதேபோன்று மனைவிக்கு கருத்தடை செய்ய விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

அதோடு ஆண்களின் கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனக்குத் தானே சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் எனக்கு நானே செய்து கொண்டதால் ஒரு மணி நேரம் ஆகியது. இது ஒரு விசித்திரமான அனுபவமாக எனக்கு இருந்தது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டுகளையும், பலர் விமர்சனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.