சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பிறகு மனிதர்கள் போன்று வேற்று கிரகத்தில் ஏலியன்கள் இருப்பதாக காலம் காலமாகவே நம்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான செய்திகள் கூட அடிக்கடி வைரல் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது ரஷ்யாவில் நடந்துள்ளது.

அதாவது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய வலையில் வித்தியாசமான ஒரு உயிரினம் சிக்கியது. அந்த உயிரினம் பார்ப்பதற்கு ஏலியன் போலவே இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் அதனை ஏலியன் என்று கூறுகிறார்கள். ஆனால் சிலர் அது கடலில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அரிய வகை உயிரினமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.