அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களில் தன்னுடைய சிறுநீரை ஒரு பெண் கலந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் உணவு பொருட்களில் சிறுநீரை கலந்ததோடு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இதுபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு முதலே செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 23 வயதான கெல்லி டெட்போர்ட் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் கூறும் போது அவர் சிறுநீரகத்தால் அசுத்தம் செய்த உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இதனால் 1.25 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
