ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தம்பதி மிச்செல் ரிங் மற்றும் ஜெனிபர் காலின்ஸ். இவர்கள் கத்தார் ஏர்வேல்ஸ் விமானத்தில் சென்ற நிலையில் தங்களுக்கு நடந்த ஒரு பயங்கரமான அனுபவம் குறித்து உள்ளூர் செய்தியாளர்களிடம் பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளனர். அதாவது ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த தம்பதி விடுமுறைக்காக வெனிஸ் நகரத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் மெல்போர்ன் நகரில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு விமானத்தில் சென்றனர். இது சுமார் 15 மணி நேர பயணம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தில் செல்லும்போது திடீரென ஒரு பெண் பயணியின் உடல்நிலை மோசமடைந்து அவர் இறந்து விட்டார்.இதன் காரணமாக 4 மணி நேரமாக இறந்த அந்த பெண்ணின் சடலத்தோடு அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது உயிரிழந்த பெண் பாத்ரூம் சென்று விட்டு திரும்பிய போது திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு விமான ஊழியர்கள் முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்ற போராடிய நிலையிலும் அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்த இறந்த பெண்ணின் சடலத்தை எடுத்து எங்களுடைய சீட்டின் அருகே வைத்து விட்டனர். அந்தப் பெண்ணின் உடலை ஒரு போர்வையால் மூடிய நிலையில் இறந்த உடலின் அருகே இருந்து பயணிப்பது சங்கடமாக இருந்ததால் ஊழியர்களிடம் வேறு சீட் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. மேலும் அந்தப் பெண்ணின் இறப்புக்கு விமான நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் பயணிகளுக்கு இது போன்று சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
