சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் 1200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,665 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
