கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோப்பனாரி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கருப்பாத்தாள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கருப்பாத்தளை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கருப்பாத்தாள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

அதற்குள் காட்டு யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பாத்தாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.