மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தானியங்கள், பணம் முடிச்சு, காசு மற்றும் கன்று குட்டிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம், மாலைகள், சந்தனம், அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ளார். ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.