திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டிய போது பாறை கல்லில் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் நந்தி சிலையை பார்வையிட்டு அந்த சிலை 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த சிலை கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.