திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முருகேசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.