விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

இதனால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி சேரும் சகதியுமாக மாறியது. மாணவர்கள் அந்த வழியாக நடந்து செல்லும் போது வழுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே தம்பிபட்டி நடுநிலைப் பள்ளியில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மழைநீர் தேங்காாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.