இந்திய உணவு வகைகள் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. காரமான கறிகள், இனிப்பு வகைகள், பாரம்பரிய பானங்கள் என எல்லாமே வெளிநாட்டவர்களை கவர்ந்து வருகின்றன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக பஞ்சாபி லஸ்ஸி குடித்து, அதன் சுவையில் மயங்கி தனது உற்சாகமான ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறார்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் veggmomo என்ற ஐடி மூலம் பகிரப்பட்டு, 40,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, பலரது இதயங்களை வென்றுள்ளது. பஞ்சாபின் பாரம்பரிய பானமான இந்த லஸ்ஸி, அந்த வெளிநாட்டு பெண்ணை தனது ரசிகையாக்கி விட்டது!

 

View this post on Instagram

 

A post shared by VEGG MOMO (@veggmomo)

வீடியோவில், அந்த பெண்ணின் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் லஸ்ஸி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கலாச்சாரத்திற்கு ஏற்ப, டம்ளரில் ஒரு ஸ்ட்ராவும் உள்ளது. முதலில் சற்று தயங்கியபடி லஸ்ஸியை ஒரு சிப்பு எடுத்தவர், அதன் சுவை நாக்கில் பட்டவுடன் முகத்தில் புன்னகையை வெளிப்படுத்துகிறார்.

“இது மிகவும் சுவையாகவும், இனிப்பாகவும் இருக்கிறது!” என்று கூறி, ஸ்ட்ராவை விட்டுவிட்டு, உண்மையான இந்திய ஸ்டைலில் டம்ளரில் நேரடியாக வாய் வைத்து குடிக்கத் தொடங்குகிறார். இந்த லஸ்ஸிக்கு சுவையில் 10-க்கு 9 மதிப்பெண்கள் கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாகக் கூறுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள், “இப்போது பஞ்சாபிகளின் உற்சாகத்திற்கு காரணம் புரிந்திருக்கும்!” என்றும், “இன்னும் இரண்டு கிளாஸ் குடிங்க, பஞ்சாபி பவரை நீங்களே உணர்வீங்க!” என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர். ஒரு பயனர், “இது தொடக்கம்தான், அடுத்து மாக்கன், பராத்தாவையும் சாப்பிட வையுங்கள்!” என்று கூற, மற்றொருவர், “தினமும் இந்த லஸ்ஸி கிடைத்தால், வேறு எந்த ஜூஸும் தேவையில்லை!” என்று பதிவிட்டுள்ளார்.