சமூக வலைதளங்களில் தினமும் புதுப்புது வீடியோக்கள் வைரலாகி, நம்மை ஆச்சரியப்படுத்தி, சிரிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. டெல்லியின் ஒரு பரபரப்பான தெருவில், ஒரு இளம்பெண் ‘பேபி டால் மை சோனே தி’ பாடலுக்கு மிகுந்த ஆர்வத்துடன் நடனமாடுகிறார்.
மேற்கத்திய உடையில், தன்னம்பிக்கையுடன் தனது நடன அசைவுகளை வெளிப்படுத்தும் அவரது ஆற்றல், பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. ஆனால், இந்த வீடியோவின் உண்மையான ஹைலைட், அங்கே தற்செயலாக நின்ற ஒரு நபரின் முகத்தில் தெரியும் தயக்கமும், சங்கடமும்தான். பெண்ணின் நடனத்தை பார்த்து, அவர் ஒரு பக்கம் ஓரமாக ஒதுங்க முயற்சிக்க, அந்த காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
ये दिल्ली की सोना यादव है इंस्टाग्राम id sonayadav100
पब्लिक प्लेस पर किसी दाढ़ी-टोपी वाले को देखकर परेशान करना और फिर इंस्टाग्राम पर लाइक्स के पीछे भागना यही इन लोगों की नई सोच बन चुकी है।
सोचिए, जब ऐसे अकाउंट्स बार-बार वही हरकतें करके भी खुलेआम घूमते हैं और उन पर कोई… pic.twitter.com/Ljgug1JxbP
— Ilyas (@Ilyas_SK_31) September 26, 2025
வீடியோ முன்னேற முன்னேற, நபரின் சங்கடமும், பெண்ணின் தன்னம்பிக்கையும் ஒரு சுவாரஸ்யமான மாறுபாட்டை உருவாக்குகிறது. பெண் தனது நடனத்தில் மூழ்கி, கேமராவையோ, பொதுமக்களையோ பொருட்படுத்தாமல் ஆடுகிறார். மறுபக்கம், அந்த நபர் கேமராவில் இருந்து தப்பிக்க முயல்கிறார்,
ஆனால் பெண்ணின் ஆரவாரமான நடனம் அவரை அருகில் இழுக்கிறது. இறுதியில், நபர் தோல்வியை ஒப்புக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட, பெண் இன்னும் உற்சாகத்துடன் தனது நடனத்தை தொடர்கிறார். இந்த வீடியோவின் சிறப்பு, பெண்ணின் தைரியமான நடனமும், அந்த நபரின் அப்பாவித்தனமான தயக்கமும் சேர்ந்து உருவாக்கும் நகைச்சுவையான தருணம்தான். இன்ஸ்டாகிராமில் சோனா யாதவ் என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, பொது இடத்தில் இப்படியான செயல்கள் செய்து வைரலாக முயல்வது குறித்து பலரையும் பேச வைத்திருக்கிறது.
