பொதுவாகவே, பெண்களின் வாகனம் ஓட்டும் திறனைக் குறித்துச் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான விமர்சனங்கள் வருவதுண்டு.
அந்த வகையில், ஓர் இளம்பெண் தனது ஸ்கூட்டியைப் (Scooty) பார்க்கிங்கில் (Parking) நிறுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து இருசக்கர வாகனங்களையும் சங்கிலித் தொடர் போலக் கவிழ்த்துத் தள்ளிய வீடியோ ஒன்று வைரலாகி, பார்ப்போரைச் சிரிக்க வைத்துள்ளது.
लोग हमेशा लड़कियों को ही दोष देते हैं पर ये कोई नहीं देखता की बाइक ही ग़लत खड़ी थी, इतना पास पास खड़ा ही क्यों किया। pic.twitter.com/OoONssvMu8
— Karishma Aziz (@KarishmaAziz_) November 28, 2025
அந்த வீடியோவில், அந்தப் பெண் ஸ்கூட்டியை ஓட்டி வந்து, நிறுத்துவதற்கு முயலும்போது, திடீரென சமநிலை தவறி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக் மீது சாய்கிறார்.
அதன் விளைவாக, அருகில் இருந்த அத்தனை பைக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சாய்ந்து விழுந்து பெரும் களேபரத்தை ஏற்படுத்துகின்றன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், செய்வதறியாமல் தலைமேல் கை வைத்து நிற்பது கேலியான காட்சியாகப் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்தவர்கள், “இந்த விபத்திற்குப் பெண்களைக் குறை சொல்லக்கூடாது, பைக்குகள் தான் மிகவும் நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன” என்று கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
