மின்சாரம் மற்றும் பராமரிப்புச் செலவே இல்லாத வகையில், ஓர் இல்லத்தரசி உருவாக்கிய ‘தனித்துவமான வாஷிங் மெஷின்’ பற்றிய வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்தச் செயல்பாடு நகைச்சுவைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெரிய அட்டைப் பெட்டியைப் (Cardboard) பயன்படுத்தி, அதன் நடுவே ஒரு வட்டமான ஓட்டையை வெட்டி, அந்தப் பெண் ஒரு ‘வாஷிங் மெஷினை’ உருவாக்குகிறார்.
Washing machine with zero electricity bill 😭 pic.twitter.com/V0YQNLODdd
— Rahi🍁 (@TheSarcastica) November 28, 2025
அந்த மெஷினின் அடியில், அவரது கணவர் ஒரு பெரிய தொட்டியில் அமர்ந்திருக்கிறார். மனைவி மேலே உள்ள ஓட்டை வழியாகத் தான் துவைக்க வேண்டிய துணிகளை ஒவ்வொன்றாக உள்ளே தள்ள, கணவர் அதைப் பிடித்துத் துவைக்கும் காட்சியைப் படமாக்கியுள்ளனர்.
“இதைத்தான் மின்சாரச் செலவே இல்லாத வாஷிங் மெஷின் என்று சொல்வது” என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர், “இப்போது அலாரம் வைக்கவும் தேவையில்லை” என்றும், “திருமணத்திற்குப் பிறகு ஆண் இஞ்சி போல மாறிவிடுகிறான்” என்றும் வேடிக்கையாகக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
