வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு (Unemployment) ஒரு சவாலான பதிலைக் கொடுக்கும் விதமாக, ஓர் இளைஞர் பழைய கோணிப்பைகளைக் (Old Sacks) கொண்டு டி-ஷர்ட்களை (T-Shirts) தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் ஐடியா எவ்வளவு அற்புதமானது என்று பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.

அந்த இளைஞர், பழைய கோணிப்பையை எடுத்துச் சென்று, அதனை ஒரு தையல்காரரிடம் கொடுத்து, உடலுக்கு உறுத்தாதவாறு உள்ளே அஸ்தர் (Lining) வைத்து டி-ஷர்ட்டாகத் தைத்துள்ளார். பின்னர், இந்தச் சிறப்பு டி-ஷர்ட்டுகளை விற்பனை செய்ய டெல்லியின் பிரபலமான இடமான கன்னாட் பிளேஸ் (Connaught Place) பகுதிக்குச் செல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sabke Bhaiya JI (@deluxebhaiyaji)

அங்கு ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் கூட, இவரது தன்னம்பிக்கை மற்றும் புதுமையான மறுசுழற்சி (Recycling) கருத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

ஒரு டி-ஷர்ட்டை உருவாக்க இவருக்குச் சுமார் ₹350 செலவாகியிருக்க, அதனை அவர் ₹3,700 வரை விற்று, 10 மடங்குக்கும் அதிகமான லாபம் ஈட்டியுள்ளார். இந்த யோசனையால் கவரப்பட்ட சில வெளிநாட்டினரும் இவரது டி-ஷர்ட்களை வாங்கியுள்ளனர்.