இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு திகிலூட்டும் வீடியோவில், அமெரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு நிபுணர் மைக் ஹால்ஸ்டன் தனது கையால் ஒரு மிகப்பெரிய மலை பாம்பை கோழி குடிலில் இருந்து இழுத்து வெளியே எடுத்துள்ளார். இது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதுமே, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘பீஸ்ட் கார்பெட் பைதான்’ என்று அழைக்கப்படும் அந்த பாம்பு, குடிலுக்குள் சுருண்டபடியே பதுங்கியிருந்ததை மைக் கண்டுபிடித்தார்.
வீடியோவில், ஹால்ஸ்டன் பெரும் துணிச்சலுடன் கோழி குடிலுக்குள் நுழைந்து, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனது கரங்களால் பாம்பை நழுவவிடாமல் பிடித்து வெளியே இழுத்தார். ஆனால் அதே நேரத்தில், பாம்பு எதிர்பாராதவிதமாக அவரது முகத்தை நோக்கி பாய்ந்ததும், மைக் அதனை தவிர்த்த விதம் பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது 20 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. “இந்த மனிதன் சைக்கோ… நான் இருந்திருந்தால் ஓடிச்சென்று ஒளிந்திருப்பேன்”, “இவன் அந்த பாம்பை கையால் ஹேண்டில் பண்ணறதைப் பாருங்க, நம்பவே முடியலை!”, “பாம்பு பாயும் வேகம் என்ன! ஆனா மைக் ஒரே செகண்ட்ல தடுக்குறாரு!” போன்றும் பல்வேறு கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் குவிந்துள்ளன.
