பிரிடனில் உள்ள பர்மிங்காம் நகரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு இந்திய மாணவி, கார் ஜன்னலை துடைத்ததற்காக £20 (இந்திய ரூ.2,300) கேட்கும் காட்சி பதிவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் அதனை நிராகரித்து “கொள்ளையடிக்கிறீர்களா?” எனக் கேட்க, மாணவி “இது வாழ்க்கைச் செலவு, பணம் கொடுக்காவிட்டால் வண்டியை தடுத்து நிறுத்துவேன்” என மிரட்டியதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவில் முதலில் மாணவி காரின் ஜன்னலை தட்டுகிறாள். ஜன்னல் திறந்தவுடன் “சர், £20 தாருங்க” எனக் கேட்கிறாள். அதிர்ச்சியில் உள்ள வாகன உரிமையாளர், “எதற்காக?” என்று கேட்கிறார். அதற்கு மாணவி, “உங்க ஜன்னலை துடைத்தேனே!” என பதிலளிக்கிறார். உரிமையாளர் “நான் துடைக்க சொல்லலையே! நான் கேட்ட இல்ல” என கூற, மாணவி தொடர்ந்து, “நான் துடைத்தேன்… அதை கொஞ்சம் பாருங்க, இது வாழ்க்கைச் செலவு தான்…” என வலியுறுத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by The Last Hour News By Avni Sharma (@thelasthournews)

“>

இந்த வீடியோ வைரலான நிலையில், இது உண்மையானதா அல்லது காட்சிப்படுத்தப்பட்டதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஏற்பட்டு வருகிறது.

பலர் இதை “ஸ்கிரிப்ட் பண்ணிய வீடியோ”, “பிராங்க் காண்டென்ட்” என விமர்சித்துள்ளனர். இதற்கு மேலும், The Last Hour News என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவியின் அடையாளம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற தெளிவான தகவல் வெளியாகவில்லை.