அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வாலியில் இருக்கும் மைக்ரோசாப்ட் துணை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியா மென்பொறியாளர் பிரதிக் பாண்டே கடந்த 20ஆம் தேதி அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் குடும்பத்தில் இணைந்த இவர், அதற்கு முன்பு வால்மார்ட், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணத்தின் காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை என்றும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு தடயமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கிரிமினல் சம்பவம் என எந்தவித அறிகுறிகளும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரபலமான இந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், இதுகுறித்து எந்தவித கருத்தும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மென்பொருள் வல்லுநர் என்ற முறையில் உலகளவில் பெயர் பெற்ற பிரதிக் பாண்டே மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.