தென்னாப்பிரிக்காவின் மடிக்வே கேம் ரிசர்வ் எனும் காட்டுப் பகுதியில், இரு வலிமைமிக்க சிங்கங்கள் ஒருவருக்கொருவர் சவால் விடுத்து களமிறங்கிய அதிரடியான காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படக் கலைஞர் தெபாட்சோ ரோஸ் தேமா தனது கேமராவில் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் @lionsightings என்ற பக்கத்தில் பகிரப்பட்டு பல மில்லியன் பார்வைகளை பெற்று வருகிறது.
View this post on Instagram
வீடியோவில், இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண் சிங்கங்கள், தங்களது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் நேரடி மோதலில் இறங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒருவரின் மீது ஒருவர் குதித்து, கர்ஜனையுடன் தங்களது சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு சிங்கம் மற்றொன்றை தரையில் தள்ளியும் விடுகிறது. ஆனால் அதுவே பின்னர் மீண்டும் எழுந்து தாக்கியது. சுமார் 45 வினாடிகள் நீண்ட இந்த சண்டையில் யார் வென்றார்கள் என்ற தெளிவான முடிவு இல்லாமல், இருவரும் தங்கள் பாதையை பின்பற்றி செல்லும் காட்சியுடன் வீடியோ முடிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் மட்டும் இன்றி சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 55 லட்சம் பார்வைகள் மற்றும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ளது. பலரும் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் குறிப்பிட்டதுபோல், “இரு கிரகங்கள் நேரில் மோதுவது போல உள்ளது!” – இந்த சிங்கங்களின் மோதல் காணும் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்பது மட்டும் உறுதி!
