மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் தேனூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் புகைபிடித்தலுக்கும் மறு அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பி.செல்லம் என்பவர் கூறியதாவது, இந்த கிராம சுந்தரராஜன் பூமி கள்ளழகர் தேசம்.

கடவுளுக்கு எங்களுடைய பக்தி மரியாதையை காட்டுவதற்கு இங்கு சிகரெட் மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய பழங்கால மரபுகளையும் மதிக்கும் ஒரு வழி என கூறியுள்ளார். மேலும் இந்த கிராமத்தில் வசிக்கும் பலரும் கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலணிகள் அணிவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது இளைஞர்களிடையே புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள  ஒரு கிராமத்தில் 450 வருடங்களாக மது, புகைக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.