பீகார் மாநிலம் பாட்னா நகரின் நியூ மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், 5 பயணிகளுடன் சென்ற கறுப்பு நிற ஸ்கார்பியோ கார், பள்ளத்தில் விழுந்தது. அந்த பகுதி முழுவதும் நீர் மூழ்கிய நிலையில் இருந்ததால், பள்ளம் தெளிவாக தெரியவில்லை. அதனால் கார் முழுவதுமாக குளத்தில் மூழ்கியது போல காட்சியளித்தது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
🚨 Patna Incident: A Mahindra Scorpio-N plunged into a water-filled pothole near Patna Junction.
The pothole had been left uncovered for over 20 days by BUIDCO, causing the SUV to overturn partially.
Owner Nitu Singh Choubey called it a “conspiracy against the government”… pic.twitter.com/ZHkWLPffvp
— Lakshay Mehta (@lakshaymehta31) September 21, 2025
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், காரின் சக்கரங்கள் மற்றும் கீழ்ப்புறம் முழுமையாக மண்ணால் மூடப்பட்டிருப்பது, அருகில் உள்ளவர்கள் காரை சுற்றி நின்று பார்ப்பது, மற்றும் சிலர் காரின் மேல் ஏறி கதவை திறக்க முயற்சிப்பது காணப்படுகிறது.
காரின் உரிமையாளர் நிது சிங் சௌபே, இது ஒரு சாதாரண விபத்து அல்ல என்றும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நிதிஷ் குமாரின் அரசு மீது குற்றம்சாட்டினார்.
