
அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை காட்டு யானை ஒன்று கொடூரமாக தாக்கியது. அவரை கீழே தள்ளிய யானை தனது காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உயிரிழப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.