ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சரணாடா கிராமத்தில் ஒரு பரிதாபமான சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றிய சஞ்சு பிஷ்னோய் (32), தனது 3 வயதுடைய மகள் யஷஸ்வியுடன் சேர்ந்து தானாகவே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அலறி ஓடி வந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தை யஷஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சஞ்சு, சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னால் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சுவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவருடைய கணவர் திலீப் பிஷ்னோய் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தாங்க முடியாத சஞ்சு தனது குழந்தையுடன் தற்கொலை செய்துள்ளது. தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் சஞ்சு எழுதிய தற்கொலைக்குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் திலீப் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களோடு, கண்பத் சிங் என்ற நபரும் தன்னை தொடர்ச்சியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதோடு, தற்கொலைக்கு இவர்கள் காரணம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சஞ்சு மற்றும் அவரது மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
