பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியில், ஓடும் காரின் சண்ரூஃப் வழியாக வெளியில் நின்றிருந்த சிறுவன் ஒருவர், டிராஃபிக் தடுப்பில் மோதிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை காயம் அடைந்தாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பெற்றோர் கட்டுப்பாட்டின்றி குழந்தையை ஆபத்தான முறையில் வெளியில் நிறுத்தியதால், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவம் சம்பந்தமான வீடியோவானது @nammabengaluroo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டது. வீடியோவில், சிவப்பு நிற XUV 300 கார் ஓடிக்கொண்டு வந்தபோது, சண்ரூஃபில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தலை, திடீரென ஒரு பாதை தடுப்பில் மோதுகிறது. அதற்குப் பிறகும் கார் இயல்பாக சென்றது. “சண்ரூஃஃபில் குழந்தையை வெளியே நிறுத்தாதீர்கள், இது உயிருக்கு ஆபத்தானது” என்று வீடியோவுடன் எச்சரிக்கை தலைப்பும் இடப்பட்டுள்ளது.