மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகளை தோளில் தூக்கிக்கொண்டு வந்த பக்தர் ஒருவரை பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் தாக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. குறும்படம் போன்ற அந்தக் காட்சிகளில், அந்த பக்தர் தன்னை காப்பாற்ற முயன்ற போது பாதுகாப்பு பணியாளர்களால் இழுத்து தூக்கப்பட்டதும் காணப்படுகிறது.
एक बाप आपल्या लाडक्या लेकिला बाप्पाच दर्शन करायला घेऊन जातो आणि तिथे लेकिसमोर आपल्या बापाला मारहाण केली जाते हे आपलच दुर्दैव आहे
लालबाग @LalbaugchaRaja मंडलाच्या छपरी पोरांनी मंडपाच्या बाहेर येऊन ही दादागिरी करावी मग डांगिवर सालती ठेवत नसतो.👎🏻☹️😡 pic.twitter.com/ET1kiL2eSl
— मराठा Empire🚩 (@maratha_marathi) September 6, 2025
சம்பவத்தின் காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பாதுகாப்பு பணியாளர் ஏன் அந்த பக்தரை தாக்கினார்? அவர் குழந்தையை ஏந்தி இருந்த போதும் ஏன் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் மக்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சில பாதுகாப்பு ஊழியர்களின் கொடூரமான நடத்தையை பலரும் கண்டித்துள்ளனர்.
ஏற்கனவே லால்பாக்சா ராஜா தரிசன முறையில் VIP தரிசனத்துக்கு முன்னுரிமை, பொது பக்தர்களை ஒழுங்காக கையாளாதது போன்ற புகாருகள் எழுந்திருந்தன. ஆகஸ்ட் 31 அன்று, மாநில மனித உரிமை ஆணையத்தில் இதற்கான புகாரும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம், “பக்தர்களை மரியாதையுடன் கையாள வேண்டியது அவசியம்” என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது.
