மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்த அடுத்த  10 நிமிடங்களில் வீடு தேடி டெலிவரி செய்யும் வகையில் அமேசான் நிறுவனம் ‘அமேசான் நவ்’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூருவில் இந்த சேவை தொடங்கப்பட்டது.

மளிகைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விரைவாக வழங்குவதற்காக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அமேசான் இதனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சேவை தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 100-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களை அமேசான் திறந்துள்ளது. இந்த மையங்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்கள் 10 நிமிடங்களுக்குள் விரைவாக டெலிவரி செய்யப்படுவதாக அமேசான் உறுதியளித்துள்ளது.