உத்தரபிரதேசம் மாநிலத்தில்  புதிதாக திருமணமான பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தர்மேந்திரா   நீண்ட நாட்களாக காதலித்து, குடும்பத்தினர் எதிர்த்தபோதும், இறுதியில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சமூக முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் ஆரம்பத்தில் சில மாதங்கள் நல்லிணக்கமாக இருந்தாலும், பின்னர் அடிக்கடி தகராறு மற்றும் சண்டைகள் வெடித்ததாக கூறப்படுகிறது.

போலீசாரின் தகவலின்படி, பேபி தொலைபேசியில் அடிக்கடி பேசுவதை கணவர் தர்மேந்திரா சந்தேகித்து வந்துள்ளார். இதனால் தம்பதியருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த நாளில், தர்மேந்திரா மதுபோதையில் வீடு திரும்பி, மனைவியுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டார். பின்னர், அவரை உதைத்து, குத்தி, செங்கல்லால் கொடூரமாக தாக்கியதில் பேபி தீவிரமாக காயமடைந்தார்.

அப்பகுதி மக்கள் உடனடியாக தர்மேந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கடுமையான காயங்களுடன் இருந்த பேபி முதலில் சிஎச்சி தடியவான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஹர்தோய் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில், இறந்த பெண்ணின்  குடும்பத்தினர், இது வரதட்சணைக் கொலை என குற்றம்சாட்டியுள்ளார். “என் பண்ணையை விற்று மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், வரதட்சணை கேட்டதால் அவளை கொடூரமாகக் கொன்றுள்ளனர்” என அவர் கூறியுள்ளார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட தர்மேந்திராவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.