பிரேசில் நாட்டின் கோயாஸ் மாநிலத்தில் உள்ள சிடேட் ஒசிடென்டல் பகுதியில், மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் ஒரு தம்பதி சுற்றித் திரிவதாக ராணுவ போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்குரிய அந்த தம்பதியை நடுரோட்டில் மறித்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த பெண், போலீசாரின் கண் முன்னாலேயே தனது ரகசிய உறுப்பிற்குள் மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியை மிகுந்த சிரமத்துடன் வெளியே எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது ‘டாிரஸ் பிடி 92’ (Taurus PT 92) ரகத் துப்பாக்கி என்பதும், அதில் இரண்டு தோட்டாக்கள் இருந்ததும் தெரியவந்தது. தனது தாயைக் கொள்ளையடித்த ஒருவனைப் பழிவாங்கவே துப்பாக்கியுடன் தேடி அலைந்ததாக அந்தப் பெண்ணின் கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சோதனை செய்யும் போது போலீசாரை இகழ்ந்து பேசியதுடன், அவரிடம் முறையான ஓட்டுநர் உரிமமும் இல்லை என்பது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், வாகனத்தையும் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.