
திமுகவின் இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான TKS இளங்கோவன், இந்தியா என்பது ஒரு நாடாக 1947ஆம் ஆண்டு வரை, ஒரு நாடாக இல்லை. எல்லாம் சொல்லுவாங்க…. பரத முனிவர் அந்த காலத்தில் இந்தியாவை ஒரே நாடா உருவாக்கினார்ன்னு சொல்லுவாங்க… ஆனால் இந்தியா ஒரு நாடாக இல்லை… பல மன்னர்கள் ஆண்ட நாடாக இருந்தது நமக்கே தெரியும்…
விந்திய மலைக்கு தெற்கே உள்ள நாகரீகம் தமிழர் நாகரிகம்…. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர்கள்… அவருடைய வாழ்க்கை முறை என்பது வேறு…. விந்திய மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை என்பது வேறாக இருந்தது. குறிப்பாக திருக்குறளில் ”பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது அல்லவா…. இதுதான் நம்முடைய வாழ்க்கை முறை.
நம்முடைய வாழ்க்கை முறையிலே மனுதர்மத்தின் படி பிறப்பாலே நான்கு வகுப்பாக இருந்தார்கள் என்ற நிலை கிடையாது. மனுதர்மம் என்ன சொல்கிறது ? மக்கள் நான்கு வகுப்பாக பிறந்தவர்கள்…. தலையிலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் சத்திரியன், இடுப்பிலே பிறந்ததும் வைசியன், காலிலே பிறந்தவன் சூத்திரன் என்று சொல்கிறது. அது சொல்வதோடு நிறுத்தி விடவில்லை. தலையிலே பிறந்தவன்தான் கடவுளின் நேரடி தொடர்பானவன், மற்றவர்களுக்கு கிடையாது.
தோளிலே பிறந்தவனுக்குத்தான் நாட்டை ஆளுகின்ற உரிமை உண்டு…. இடுப்பிலே பிறந்தவன் தான் வணிகம் செய்யும் உரிமை உண்டு. காலிலே பிறந்தவனுக்கு இந்த மேலே பிறந்த மூன்று பேருக்கும் சேவை செய்யும் உரிமை மட்டும்தான் உண்டு, அவர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே…. நம்முடைய இலக்கியங்களை நாம் பார்த்தோம் என்றால், நம்முடைய மன்னர்கள்…. இங்கே இருக்கின்ற சேர – சோழ – பாண்டிய – பல்லவ மன்னர்களை எடுத்துக் கொள்ளுங்கள்….
.இங்கே உள்ள சிற்றரசர்கள்…. நமக்கு தெரிந்த சிற்றரசர்களை எடுத்துக் கொள்ளுங்கள்…. இவர்களில் யாரும் சத்திரிய குலத்தவர் அல்ல….. மனிதனாக பிறந்து…. வீரனாக இருந்து.. இந்த நாட்டை ஆண்டவர்கள். சத்ரியன் தான் மன்னனாக வேண்டும் என்கின்ற நிலை விந்திய மலைக்கு தெற்கே உள்ள தமிழ் பண்பாடு உள்ள…. தமிழ் மொழி உள்ள….. பகுதியிலே அறவே கிடையாது என தெரிவித்தார்.